இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி கண்டிருந்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக இந்திய அணியில் குல்தீப் யாதவ் 23 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி, 3 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் 15ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி 20 ஓவர் கிரிக்கெட் தொடரை வெல்வது இதுவே முதல் முறை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments