Advertisement

ஒலிம்பிக் - வட்டு எறிதல் இறுதி சுற்றில் கமல்பிரீத் கவுர்: பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். பாட்மிண்டன் அரை இறுதியில் பி.வி.சிந்து, குத்துச்சண்டையில் அமித் பங்கால் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழாவின் 9-வது நாளான நேற்று மகளிருக்கான வட்டு எறிதல் தகுதிச் சுற்றில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் தனது 3-வது முயற்சியில் 64 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மகளிருக்கான ஹாக்கி ஏ பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி தனது கடைசிலீக் ஆட்டத்தில் 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்திய அணி சார்பில் வந்தனா கட்டாரியா 3 கோல்களும் நேகா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதனால் இந்திய மகளிர் அணி லீக் சுற்றில் 4-வது இடம் பிடித்து கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments