டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பங்கல் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக்கில் ஆடவர் 52 கிலோ எடை பிரிவுக்கான குத்துச்சண்டையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அமித் பங்கல் - கொலம்பியாவின் மார்டினஸ் மோதினர்.இதில் அமித் பங்கலை 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் மார்டினஸ் வென்றார்.
கடந்த ரியோ ஒலிம்பிக்கில் மார்டினஸ் வெள்ளிப் பதக்கம் வென்றர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோல்வியை அடுத்து அமித் பங்கலின் தற்போதைய ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments