Advertisement

பிசிசிஐக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை: பதிலடி கொடுத்த பிசிசிஐ அதிகாரி

காஷ்மீர் பிரீமியர் லீக் விவகாரம் தொடர்பாக இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், பிசிசிஐ அதிகாரி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.
 
பாகிஸ்தான் நடத்தும் காஷ்மீர் பிரீமியர் லீக்கில் விளையாடக்கூடாது என பிசிசிஐ வற்புறுத்துவதாக தென்னாப்ரிக்காவின் முன்னாள் வீரர் கிப்ஸ் ட்விட்டரில் குற்றஞ்சாட்டியிருந்தார். இதையடுத்து பிசிசிஐ தவறான போக்கை கடைபிடிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குழம்பிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ மீது குற்றஞ்சாட்டியுள்ள கிப்ஸ், சூதாட்ட புகாரில் ஈடுபட்டவர் என சாடிய அவர், காஷ்மீர் பிரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கொண்டு சென்றால் அதனை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments