Advertisement

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்கில் 60 கிலோ எடை பிரிவின் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் தோல்வியடைந்தார்.

ஒலிம்பிக்கில் 60 கிலோ எடை பிரிவின் மகளிர் குத்துச்சண்டை போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் தாய்லாந்தின் சுடாபோர்னுடன் மோதினார். இதில் அபாரமாக விளையாடிய சுடாபோர்ன் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுரை வீழ்த்தினார். இதனால் 60 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு பறிபோனது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments