Advertisement

ஒலிம்பிக் 400 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி: உற்சாகத்தில் சட்டையை கிழித்த நார்வே வீரர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றதையடுத்து நார்வே வீரர் கார்ஸ்டன் உற்சாக மிகுதியில் தான் அணிந்திருந்த சட்டையை கிழித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் பந்தய தூரத்தை 45.94 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்தார். அப்போது வெற்றிக் கோட்டை அடையும்போது உற்சாக மிகுதியில் மேல் சட்டையை கிழித்து கூச்சலிட்டார். அந்தப் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

image

இந்த 400 மீட்டர் ஓட்டத்தில் 46.17 வினாடிகளில் கடந்து அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் பிரேசில் வீரர் அலிசன் சாண்டோஸ் பந்தய தூரத்தை 46.72 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலம் வென்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments