மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தனது தந்தை ஆட்டமிழந்தவுடன் ஏபிடிவில்லியர்ஸின் மகன் இருக்கையில் ஓங்கி அடித்து அதிருப்தியை வெளிப்படுத்திய க்யூட்டான வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
மும்பைக்கு எதிரான போட்டியின் போது தங்கள் அணியை உற்சாகப்படுத்த பெங்களூரு அணி வீரர்களின் குடும்பத்தினர் அரங்கில் அமர்ந்திருந்தனர். அப்போது இறுதி ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்த அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த அடுத்த பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். தந்தை ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்ததால் டிவில்லியர்ஸின் மகன் இருக்கையில் ஓங்கி அடித்து விரக்தியை வெளிப்படுத்தினார். பின்னர் வலி ஏற்பட்டதால் கைகளை உதறிக் கொண்டு தவித்தது ரசிகர்களுக்கு பரிதாபம் கலந்த நகைப்பை ஏற்படுத்தியது.
Me after watching bhaubali
— ANMOL KAUR (@anmol_banga) September 26, 2021
#RCBvsMI pic.twitter.com/Oe0QJb6XgS
இதனைப்படிக்க...கேரளாவில் இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்" எச்சரிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments