Advertisement

RR vs RCB : டாஸ் வென்ற கோலி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ச அணிகளில் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

image

இதுவரை 24 அணிகளும் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் பெங்களூர் 11 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 10 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று ஆட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. இந்த சீசனில் இதற்கு முந்தைய போட்டியில் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி இருந்தது. படிக்கல் மற்றும் கோலி 181 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். 

புள்ளிப்பட்டியலில் இப்போது பெங்களூர் மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ஏழாவாது இடத்திலும் உள்ளன. 

ஆடும் லெவன் விவரம்... 

image

ராஜஸ்தான் ராயல்ஸ்!

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சகாரியா, முஸ்தாபிஜூர் ரஹ்மான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், சாஹல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments