இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, தொடக்கம் முதலே விக்கெட்களை அடுத்தடுத்து பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணி 20 ஆவது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 126 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் அதிரடி காட்டினர். ராய் மற்றும் டேவிட் மலான் ஆகிய இருவரின் விக்கெட்களை மட்டுமே ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடிந்தது.
அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். இதையடுத்து, 11.4 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பங்கேற்ற 3 போட்டிகளிலுள் வென்ற இங்கிலாந்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததுடன் அரையிறுதியை ஏறக்குறைய நெருங்கியுள்ளது.
இதையும் படிக்கலாம்: 'நான் இனவாதி அல்ல' - ஒடுக்குமுறைக்கு எதிராக மண்டியிட்ட டீ காக்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments