Advertisement

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு; சிஎஸ்கே முதலில் பேட்டிங்..ஆடும் லெவன் விவரம்!

நடப்பு ஐபிஎல் சீசனின் 47-வது லீக் ஆட்டத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பவுலிங் தேர்வு செய்துள்ளார். சென்னை இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்கிறது. 

image

இரு அணிகளும் இதுவரை 24 ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அதில் சென்னை 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற முதல் பாதி சீசனில் ராஜஸ்தானை சென்னை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

நடப்பு சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன. 

ஆடும் லெவன் விவரம்!

image

சென்னை சூப்பர் கிங்ஸ் 

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், கே.எம். ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட்

ராஜஸ்தான் ராயல்ஸ் 

எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்டியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments