Advertisement

‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவை கௌரவித்த சி.எஸ்.கே நிர்வாகம்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியா தடகள வீரர் நீரஜ் சோப்ராவை கௌரவித்துள்ளது என்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம். அவரது அபாரமான செயல்பாட்டை பாராட்டி 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம். 

அதோடு ‘8758’ என்ற நம்பர் பொறிக்கப்பட்ட சென்னை அணியின் ஜெர்சி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த எண் நீரஜ், ஒலிம்பிக்கில் தனது ஈட்டியை எறிந்த 87.58 மீட்டர் தூரத்தை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. 

“தடகள விளையாட்டில் நாட்டிற்கு முதல் தங்கம் வென்று கொடுத்து நீரஜ் நம் நாட்டுக்கே அதன் மூலம் புகழ் சேர்த்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளார் அவர். 87.58 என்ற இந்த நம்பர் இந்திய விளையாட்டின் வரலாற்றில் முக்கிய மைல்கல். அவருக்கு அந்த நம்பர் இருக்கின்ற ஜெர்சியை வழங்கியதில் எங்களுக்கு பெருமை. தொடர்ந்து பல பெருமைகளை நாட்டுக்காக கொண்டு வர உள்ள அவரை நாங்கள் வாழ்த்துகிறோம்” என சென்னை அணியின் சி.இ. ஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

“உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் எனது நன்றி. தங்கம் வென்றால் எனக்கு இப்படி ஒரு வரவேற்பும், மக்களின் அன்பும் கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. அது மிகவும் அற்புதமானது. நிச்சயம் களத்தில் கடுமையாக உழைத்து, நல்ல முடிவுகளை கொண்டு வருவேன்” என தெரிவித்துள்ளார் பரிசை பெற்றுக் கொண்ட நீரஜ் சோப்ரா. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments