ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்களை குவிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பியை கொடுத்து அங்கீகரிப்பது வழக்கம். நடப்பு சீசனில் தவான், ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், கே.எல்.ராகுல் என நான்கு பேட்ஸ்மேன்கள் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர்.
அதில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வரும் 53-வது லீக் போட்டியில் இந்த ஆரஞ்சு கேப் “ராகுல் - கெய்க்வாட் - டூப்ளசிஸ்” என மூவரிடம் கைமாறி உள்ளது. இறுதியில் அது மீண்டும் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வசமே சென்று சேர்ந்துள்ளது.
நடப்பு சீசனில் 561+ ரன்களுடன் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் சென்னை அணியின் கெய்க்வாட் மாறும் டூப்ளசிஸ் உள்ளனர். ஒரே போட்டியில் மூன்று வீரர்களிடம் மியூசிக்கல் சேர் போல ஆரஞ்சு கேப் கைமாறியது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதலில் ராகுல் வசம் இருந்த ஆரஞ்சு கேப் ருதுராஜ், பின்னர் டூப்ளசிஸ் இடம் சென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ராகுல் ரன் குவிக்க அந்த கேப் அவரிடம் கைமாறியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments