எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தற்போது உள்ள 8 அணிகளில் இடம் பெற்றுள்ள வீரர்களில் அதிகபட்சம் 4 பேரை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
அதற்கான கெடு இன்றுடன் முடிந்துள்ள நிலையில் சென்னை அணிக்காக ஜடேஜாவும், பெங்களூர் அணிக்காக முகமது சிராஜும் விளையாடுவது உறுதியாகி உள்ளது.
அகமதாபாத் அணி ஜடேஜாவுக்கு 20 கோடி ரூபாய் வரை தர தயாராக உள்ளது. இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தக்க வைத்துக் கொண்டால் அவருக்கு 16 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும். அந்த 16 கோடி ரூபாயுடன் சென்னை அணிக்காக விளையாட பச்சைக் கொடி காட்டியுள்ளார் ஜடேஜா.
அதே போல முகமது சிராஜுக்கு 10 கோடி ரூபாய் வரை தர தயாராக உள்ளது லக்னோ அணி. ஆனால் அவர் 7 கோடி ரூபாயுடன் பெங்களூர் அணிக்காக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார்.
இவர்களது செயல் பணத்தை விட அணியே முக்கியம் என்பதை சுட்டிக் காட்டும் வகையில் உள்ளது.
இதையும் படிக்கலாம் : டிஜிட்டல் உலகை ஆளும் இந்தியர்கள்! சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா வழியில் பரக் அகர்வால்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments