உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் அர்ஜென்டினாவை சேர்ந்த மெஸ்ஸி மற்றும் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரேமோஸ் என இருவரும் இருப்பர். மெஸ்ஸி அட்டாகிங் பிளேயர் என்றால் ரேமோஸ் சிறந்த தடுப்பாட்டக்காரர் (Defender). இருவரும் தற்போது PSG கிளப் அணிக்காக ஒரே அணியில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரேமோஸிடம், மெஸ்ஸி இந்த ஆண்டு ‘பாலன் டி ஓர் விருது’ வெல்வது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு சிறிதும் யோசிக்காமல் “மெஸ்ஸி அந்த விருதை வெல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் இணைந்து PSG அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
இதுவரையில் மெஸ்ஸி ஆறுமுறை பாலன் டி ஓர் விருதை வென்றுள்ளார். இந்த முறை வென்றால் அது ஏழாவதாக இருக்கும். கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு கொடுக்கப்படும் விருது இது. ரொனால்டோ இந்த விருதை ஐந்து முறை வென்றுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments