Advertisement

தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி: சென்னை மாணவருக்கு 4 தங்கம்

சென்னை: டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற 59-வது தேசிய ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை,அரும்பாக்கத்தில் உள்ள கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர் அவிக் ஷித் விஜய் விஸ்வநாத் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

அண்ணா நகர் ரோலக் ஸ்கேட்டிங் கிளப் தலைமை பயிற்சியாளர் கே.பி.உன்னிகிருஷ்ணனிடம் கடந்த 2010-ம் ஆண்டுமுதல் இவர் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறார். அவிக் ஷித் பல மாநில, தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் சிபிஎஸ்சி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைப் பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments