
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பிரதான வீரர்களில் ஒருவர் ரஹானே. கடைசியாக அவர் விளையாடிய 23 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட பதிவு செய்யவில்லை. இந்த 23 இன்னிங்ஸில் இரண்டு அரை சதம் மட்டுமே பதிவு செய்துள்ளார். இந்த 23 இன்னிங்ஸில் எட்டு முறை ஒற்றை இலக்க எண்களில் அவுட்டாகி உள்ளார். இப்படியாக அவரது மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில்தான் “ரஹானே இந்திய அணியில் நீடிப்பாரா?” என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கோலி முன் வைத்துள்ளனர்.
“நான் மட்டுமல்ல யாராலும் அவரது ஃபார்ம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாது. முக்கியமான டெஸ்ட் போட்டிகளில் அணிக்காக தனது பங்களிப்பு மூலம் ஆட்டத்தில் தாக்கம் கொடுத்த வீரரை நாம் சப்போர்ட் செய்ய வேண்டும். அவருக்கு பக்கபலமாக இந்த சூழலில் நிற்க வேண்டும். தனியொரு வீரர் மீது இப்படி வைக்கப்படும் விமர்சனங்களை ஒரு அணியாக எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளார் கோலி.
இதனை நியூசிலாந்து அணியை மும்பை டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய பிறகு தெரிவித்துள்ளார் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments