Advertisement

ஆஷஸ் கோப்பையைத் தக்கவைத்தது ஆஸ்திரேலியா: இங்கிலாந்தை கிழித்தெறிந்த போலந்து: மறக்கமுடியாத இன்னிங்ஸ் தோல்வி


மெல்போர்னில் நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலிய அணி தக்கவைத்தது. ஆட்டம் தொடங்கி 3-வது நாளில் முடிவு கிடைத்துள்ளது.

வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்தின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அறிமுக வீரர் போலந்த் 6 விக்ெகட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து சரிவுக்குக் காரணமாக அமைந்தார். 4 ஓவர்கள் வீசிய போலந்த் ஒரு மெய்டன் 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த வீச்சை நிரூபித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments