நியூசிலாந்து நாட்டில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை Mount Maunganui பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளன. நடப்பு உலகக் கோப்பையில் இந்த மைதானத்தில் தான் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
மறுபக்கம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது. நாளை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விடும்.
இந்திய அணி கடைசியாக விளையாடிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இங்கிலாந்தை நாளைய போட்டியில் வீழ்த்தினால் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி மேலும் பிரகாசிக்க செய்யும். ஏனெனில் புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் ஆகிய வீராங்கனைகள் கடந்த போட்டியில் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments