Advertisement

சுவிஸ் ஓபன் பாட்மிண்டனில் பட்டம் வென்றார் பி.வி.சிந்து; ஆடவர் பிரிவில் வெள்ளி வென்றார் பிரணாய்

பாஸல்: சுவிஸ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் நடைபெற்ற இத்தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனை எதிர்த்து விளையாடினார். 49 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம்வென்றார். முதல் செட்டில் போராடிய பூசனன், 2-வது செட்டில் சிந்துவின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் பிரணாய் 12-21, 18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.சுவிஸ் ஒபன் பாட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
via TamilSportsTime

Post a Comment

0 Comments