ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. அதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. பாகிஸ்தானில் உள்ள லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசுவதாக தெரிவித்துள்ளது. அதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்கிறது. முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1 - 0 என்ற கணக்கில் வென்றிருந்தது.
பாகிஸ்தான் அணியில் முகமது வாசிம் ஜூனியர் மற்றும் ஜாஹித் முகமது ஆகியோர் அறிமுக வீரர்களாக இந்தப் போட்டியில் களம் காண்கிறார்கள். ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்துகிறார். பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்கு தலைமை தாங்குகிறார். இந்த தொடர் முடிந்ததும் இரு அணிகளும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடுகின்றன. அது முடிந்தவுடன் ஐபிஎல் 2022 சீசனில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியா திரும்புவார்கள் எனத் தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments