Advertisement

ஐபிஎல் 2022: குஜராத் அணிக்கு எதிரான ஆட்டம் - டெல்லி அணி பவுலிங் தேர்வு

15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியின் மற்றொரு ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பவுலிங் தேர்வுசெய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 10-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், மும்பையில் நடைபெறும் போட்டியில்,  டாஸ் வென்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பவுலிங் தேர்வுசெய்துள்ளது.

கடந்த திங்கள்கிழமை நடந்தப் போட்டியில், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்து இந்த சீசனை அட்டகாசமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் டெல்லி அணியை நம்பிக்கையோடு எதிர்கொள்கின்றனர் குஜராத் அணி. தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை சாய்த்த டெல்லி அணி 2-வது வெற்றிக்கு குறி வைத்து களம் காணுகிறது.

image

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள்:

ஷுப்மன் கில், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், வருண் ஆரோன் , முகமது ஷமி.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி:

பிரித்வி ஷா, டிம் சேஃபெர்ட், மந்தீப் சிங், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், கலீல் அகமது, குல்தீப் யாதவ், ரஹ்மான்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments