ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், மைதானங்களில் நடந்து கொண்ட விதம் பலமுறை விமர்சனங்களை சந்தித்தது. இவர் பொதுவாக கோபம் அடையும் குணம் கொண்டவர். கேட்ச் பிடித்தவுடன் பந்தை கீழே கொண்டு சென்று அம்பயர்களை சரிபார்த்துக்கொள்ளும்படி கிண்டலடிப்பது, ஃபீல்டிங்கில் சீனியர் வீரர்களிடம் ஆக்ரோஷத்துடன் நடந்துக்கொள்வது, எதிரணி வீரர்களை முறைப்பது என தொடர்ந்து தன் சேட்டைகளை செய்து வருகிறார். இது குறித்து ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுரை அளித்த பிறகும் ரியான் பராக் தனது போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக் ஒரு அரைசதம் உள்பட 183 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் ரியான் பராக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, ரியான் பராக்கை மேம்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து குமார் சங்கக்காரா கூறுகையில், "பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்கள் அணியினரின் பேட்டிங்கை நீங்கள் எடுத்துக் கொண்டால், ஆரம்ப கட்டத்தில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோரின் பெரும் பங்களிப்பை நாங்கள் பெற்றுள்ளோம். ரியான் பராக் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் நன்றாக விளையாடினர். ஆனால் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில், சப்போர்ட் ரோல் பிளேயர்களிடமிருந்தும் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஆட்டத்திறன் தேவை என்று நான் நினைக்கிறேன்.
ரியான் பராக், அவருக்கு பெரிய அளவிலான திறன் கிடைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். அடுத்த சீசனில் நாங்கள் வரும் நேரத்தில் அவரை அதிக பேட்டிங் எண்ணிக்கைக்கு கொண்டு வர வேண்டும். வெறும் டெத் ஹிட்டரை விட ஆரம்ப மிடில் ஆர்டர் வீரராக அவரை மாற்றுவதற்கு எதிர்நோக்குகிறேன். ஏனென்றால், அவர் சுழல் மற்றும் வேகப் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்கிறார்'' என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022 நிறைவு: யார் யாருக்கு எந்தெந்த விருது?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments