Advertisement

நார்வே செஸ்: உலக சாம்பியனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

நார்வே செஸ் போட்டித் தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 7-வது சுற்றில் வீழ்த்தி, நார்வே செஸ் பிளிட்ஸ் போட்டித் தொடரில் 4-வது இடம் பிடித்தார். இந்தத் தோல்வியினால் கார்ல்சன் 2-வது இடத்துக்குச் சென்றார். 5-வது சுற்றில் அனிஷ் கிரியிடமும், 9-வது சுற்றில் பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவிடமும் தோல்வியடைந்ததால், ஆனந்த் 5 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.

அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான வெஸ்லி சோ, 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நெதர்லாந்து கிராண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்தை பிடித்தார்.

இதையும் படிக்கலாம்: மைதான பொறுப்பாளர்கள், பராமரிப்பாளர்களுக்கு ரூ.1.25 கோடி பரிசு - பிசிசிஐ அறிவிப்பு


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments