Advertisement

'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்

சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் தினேஷ் கார்த்திக்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கும் இந்த தொடருக்கு 18 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக இந்த தொடரில் கேஎல் ராகுலும், துணை கேப்டனாக ரிஷப் பண்டும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2004 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இதுவரை 26 டெஸ்ட், 32 டி20 மற்றும் 94 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அதன் பிறகு அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

image

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடிவரும் தினேஷ் கார்த்திக், சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாடுகிறார்.

இந்நிலையில் தனது ரீ-என்ட்ரி குறித்து ட்வீட் செய்துள்ள தினேஷ் கார்த்திக், "உங்களை நீங்கள் நம்பினால் அனைத்தும் உங்களிடத்தில் வந்து சேரும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. கடின உழைப்பு தொடரும்" எனப் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் தினேஷ் கார்த்திக் 14 ஆட்டங்களில் 191.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 287 ரன்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

image

தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணைக் கேப்டன்), தினேஷ் கார்த்திக், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஜ்வேந்திர சஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ராக் மாலிக்.

இதையும் படிக்கலாம்: ”தடுமாற்றங்கள் நடக்கலாம்; அடுத்த சீசனில் மீண்டு வருவார்” - பண்ட் குறித்து ரோகித் கருத்து

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments