நியூசிலாந்து வீரர் நிக்கோலஸ் சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தது குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் உலகம் பல வித்தியாசமான ஆட்டமிழப்புகளை பார்த்திருக்கிறது. கேட்ச், பவுல்டு, ரன் அவுட் , ஸ்டம்பிங் என எல்லோருக்கும் தெரிந்த ஆட்டமிழப்புகளை தாண்டி ஹிட் விக்கெட் போன்றவை உண்டு. ஏன், ஐபிஎல் போட்டிகளில் அஸ்வின் செய்த மேன்கிட் ஆட்டமிழப்பையும் கூட பார்த்திருப்போம். ஆனால், கிரிக்கெட் உலகம் பார்த்திராக வகையில் ஒரு ஆட்டமிழப்பு இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்துள்ளது. தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதுதான் ஹாட் டாப்பிங். அதற்கு விக்கெட் கொடுத்திருக்க கூடாது என ஒரு தரப்பும், சரியானது தான் என மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கங்களை கொட்டி வருகிறார். இதனை பலரும் இந்த ஆட்டமிழப்பு முறையை பார்த்து வியப்போடு ரசித்தும் வருகிறார்.
அப்படி என்னதான் நடந்தது. அந்த விக்கெட் குறித்து அதனை எடுத்த லீச் என்ன சொல்கிறார் என்பதை பார்க்கலாம்.
இங்கிலாந்து - நியூலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. நியூசிலாந்து 83 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. அதனால், விக்கெட் சரிவை தடுக்கும் பொருட்டு நிக்கோலஸ் மற்றும் மிட்செல் மிகவும் நிதானமான ஆட்டத்தை விளையாடினர். ஆட்டத்தின் 56வது ஓவரை ஜாக் லீச் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட நிக்கோலஸ் அம்பயருக்கு நேராக அடித்தார். அப்பொது எதிர் திசையில் ரன்னராக இருந்த மிட்செல் தன்னை நோக்கி பந்து வருவதாக நினைத்து பேட்டை மேலே தூக்கினார். அப்பொது பந்து அவரது பேட்டிங் மீது பட்டு பீல்டிங் செய்து கொண்டிருந்த லீஸ் வசம் சென்றது. யாரும் எதிர்பாராத விதமாக இந்த விக்கெட் நிகழ்ந்தது. எல்லோரும் லீச் அருகில் வந்து கொண்டாட்ட மனநிலை அவரை வாழ்த்தினர். ஆனால், அவருக்கோ ஒன்றுமே புரியவில்லை.
இந்த நிலையில்தான், சர்ச்சையான அந்த விக்கெட் குறித்து லீச் காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். லீச் கூறுகையில், “இப்படியான விக்கெட்டிற்கு அனுமதி உண்டு என்பதே எனக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த ஆட்டமிழப்பு முறை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் நிக்கோலஸ்க்கு சிறப்பாக பந்துவீசினேன், அவ்வளவு தான்.
இது சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு. ஒரு முட்டாள்தனமான ஆட்டத்தை நாங்கள் விளையாடி இருக்கிறோம் என்றுதான் என்னை நினைக்க வைத்திருக்கிறது” என்றார்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் மிட்செல் 109, விக்கெட் கீப்பர் டாம் பிளண்டெல் 55 ரன்கள் எடுத்தனர். நிக்கோலஸ் 19 ரன்களில் சர்ச்சையான முறையில் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து அணி 55 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. லீஸ், கிரவ்லே, போப், ரூட் என அனைவரும் ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். அப்போது, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 33 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்துள்ளது. பேரிஸ்டோவ் 78, ஓவர்டன் 42 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments