Advertisement

வலைப்பயிற்சியில் சக வீரர்களுடன் நீண்ட ஆலோசனை நடத்திய விராட் கோலி - வீடியோ வெளியீடு

வலைப்பயிற்சியின்போது விராட் கோலி சக வீரர்களுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்திய வீடியோவை  லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2–1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி, வரும் ஜூலை 1ஆம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது. இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.

அதன்பின், 3 டி20, (ஜூலை 7, 9, 10), 3 ஒருநாள் (ஜூலை 12, 14, 17) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணியினர் லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கின்றனர். இப்போட்டி நாளை முதல் 26ஆம் தேதி வரை லீசெஸ்டரில் நடக்க உள்ளது.

image

இதையொட்டி விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டோர் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வலைப்பயிற்சியின்போது விராட் கோலி சக வீரர்களுடன் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களையும் காத்திருக்கும் சவால்களையும் வீரர்களிடம் பகிர்ந்துகொண்டார். லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாம்: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த இலங்கை! ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments