டோக்கியோ ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் இளவேனில் - திவ்யான்ஷ், அஞ்சும் - தீபக் இணைகள் தோல்வியைத் தழுவின. கலப்பு இரட்டையர் பிரிவில், இவ்விரண்டு இணைகளும் வெற்றியை கோட்டைவிட்டு, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டனர்.
டோக்கியோ ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பேக்கர் - சவுரப் சௌத்ரி இணை 2ஆவது சுற்றில் தோல்வியடைந்தது. இரண்டாவது தகுதிச் சுற்றில், இந்திய இணையால் 7ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்தப்பிரிவில் சீனா தங்கப் பதக்கத்தையும், ரஷ்யா வெள்ளியையும், உக்ரைன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றன. மற்றொரு இந்திய இணையான யசஷ்வினி தேஸ்வால் - அபிஷேக் வர்மாவும் தோல்வியைத் தழுவியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments