Advertisement

ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது.

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தன்னுடைய கடைசி மற்றும் 5-ஆவது லீக் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் வேதாந்தா கடாரியா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். பின்பு இந்தியாவின் நேஹா ஒரு கோலும் அடித்தார். தென் ஆப்பிரிக்கா வீராங்கனைகள் மொத்தம் 3 கோல் அடித்தனர்.

image

இதனையடுத்து இந்திய மகளிர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்காவை வென்றது. ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா பெறும் 2-ஆவது வெற்றியாகும் இது. இந்த வெற்றியை தொடர்ந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதிப் பெறும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments