டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆடவர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வில்வித்தை அணி தோல்வியை தழுவியது.
வில்வித்தை பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் அதானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் ஆகியோர் கொரியாவின் கிம் ஜே டியோக், ஜின் யெக், கிம் வோஜின் அணியை எதிர்கொண்டது.இதில் 6-0 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.
முன்னதாக கஜகஸ்தான் அணியை திறம்பட வீழ்த்தி காலிறுத்திக்கு தகுதிப்பெற்ற இந்தியா, கொரியாவின் ஆதிக்கத்தால் தோல்வி கண்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments