டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவர் வில்வித்தையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அதானு தாஸ் தோல்வியடைந்தார்.
ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான வில்வித்தையின் காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதானு தாஸ் - ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தக்காரு புருகாகாவுடன் மோதினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் அதானு தாஸை வீழ்த்தினார் புருகாவா. இந்தத் தோல்வியை அடுத்து வில்வித்தையில் இந்தியாவின் ஒலிம்பிக் பதக்க கனவு முடிவுக்கு வந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments