Advertisement

ஒலிம்பிக்: ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஹாக்கி விளையாட்டில் குரூப் A-வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் 1 - 7 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. இந்தியாவுக்காக தில்பிரீத் சிங் மட்டுமே கோல் அடித்திருந்தார்.

ஆட்டத்தில் முதல் 26 நிமிடங்களுக்குள் 4 கோல்களை நெட்டுக்குள் தள்ளியிருந்தது ஆஸ்திரேலியா. அதன்பிறகு இந்தியா ஒரு கோலை அடித்தும் ஆட்டத்தில் கம்பேக் கொடுக்க முடியவில்லை. இறுதியில் ஆஸ்திரேலியா 7 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. குரூப் சுற்றில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். தற்போது இந்தியா குரூப் A-வில் மூன்றாவது இடத்தில் உள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments