ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - அங்கிதா ரெய்னா முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டது.
இந்தியாவின் சானியா இணை முதல் சுற்றிலே உக்ரைனின் கிச்சனோக் சகோதரிகளிடம் மோதியது. இதில் முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் சானியா இணை அசத்தலாக வென்றது. ஆனால் அடுத்த இரண்டு செட்டுகளில் அபாரமாக விளையாடிய கிச்சனோக் சகோதரிகள் 7-6, 10-8 என்ற கணக்கில் டை பிரேக்கர் முறையில் வென்றனர். இதனால் இந்திய இணை தோல்வியடைந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments