இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் எனக் கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரை வென்ற நிலையில், முதல் டி20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று நடைபெற வேண்டிய டி20 போட்டிக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
க்ருணால் பாண்ட்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனினும் அவர்கள் இன்று நடைபெறும் போட்டியில் களமிறங்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
20 வீரர்களும், பயிற்சி பந்துவீச்சாளர்களாக 5 பேரும் இலங்கை சென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் யார்யார் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே க்ருணால் பாண்ட்யா 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார் என்றும், அவர் இந்திய அணியுடன் தாயகம் திரும்ப மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments