Advertisement

"36 ரன்னில் ஆல் அவுட்; ஆனாலும் தொடரையே வென்றது இந்தியா”- இங்கிலாந்துக்கு ஹுசைன் எச்சரிக்கை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும் 1 - 1 என தொடரில் சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்திய அணி அதிபயங்கரமானது எனவும், அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்கு பிறகு தொடரையே வென்றவர்கள் இந்தியர்கள் என இங்கிலாந்து அணிக்கு வார்னிங் கொடுத்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன். 

image

“லீட்ஸ் நகரின் ஹெட்டிங்கிலே மைதானத்தில் இங்கிலாந்து பவுலர்கள் ஸ்விங் பந்துவீச்சில் மிரட்டி இருக்கலாம். சீம் பவுலர்கள் அதிகம் உள்ள இந்திய அணியால் அந்த போட்டியில் அதை செய்ய முடியாமல் போனது. 

நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ள மைதானத்தின் ஆடுகளங்கள் அவர்களுக்கு கை கொடுக்கும் என்பதை இங்கிலாந்து அணி கவனத்தில் கொள்ள வேண்டும். 

இந்திய அணி அடிலெய்ட் டெஸ்டில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் அந்த தொடரையே வென்று அசத்தியவர்கள். அந்த போட்டிக்கு பிறகு கோலி கூட அணியில் இல்லை. அவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். அவர்களது கம்பேக் வேறு ரகமாக இருக்கும். அதை இங்கிலாந்து அணி கவனத்தில் கொள்ள வேண்டும். 

image

இந்த தொடரிலும் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்திய கேப்டன் கோலி நல்ல பார்மில் இல்லாமல் போனாலும் அவர்களது அணிக்கு அவரது போர்குணம் பெரிதும் கைகொடுத்து வருகிறது” என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். 

இதனை அவர் டெலிகிராப் பத்திரிகையில் எழுதி உள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை மறுதினம் துவங்க உள்ளது. 

இதையும் படிக்கலாம் : தலிபான்கள் நல்லெண்ணத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்:  அஃப்ரிடி சர்ச்சை கருத்து 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments