இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
இங்கிலாந்தில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, கேப்டன் ரூட் உள்ளிட்ட மேல்வரிசை வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மூன்றாம் நாளில் 432 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
354 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாளில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 34 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுலின் விக்கெட்டை இழந்தது. பின்னர் ரோகித் சர்மாவும், புஜாராவும் பொறுப்புடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர். அரை சதம் விளாசிய ரோகித் 59 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் கேப்டன் விராட் கோலியும், புஜாராவும் சராசரியான வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர்.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளுக்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 91 ரன்களுடனும், கோலி 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்னும் 139 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments