
இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் கால்கள் செயலிழந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் ஆரோன் லாயட் தெரிவித்துள்ளார்.
51 வயதான கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அவரை சிட்னிக்கு இடம் மாற்றி சிகிச்சை கொடுக்கவும் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொறுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிட்னி மருத்துவமனை கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ் கெய்ன்ஸ் உயிர்காக்கும் கருவிகளிலிருந்து விடுதலை பெற்றார் என்றும் உடல் நிலை தேறி தன் குடும்பத்தினருடம் கெய்ன்ஸ் பேசினார் என்றும் கூறியுள்ளது. இதனையடுத்து கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது வழக்கறிஞரான ஆரோன் லாயட் "உயிர் காக்கும் சிகிச்சையின்போது, முதுகு தண்டில் அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டது. இதனால் அவரது கால்கள் செயலிழந்துவிட்டது. இதன்காரணமாக ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறந்த முதுக தண்டு சிகிச்சை மையத்தில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இப்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்துக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments