
ஐபிஎல் 2021 தொடரில் மீதமுள்ள ஆட்டங்களில் விளையாட கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் அமீரக ஷெட்யூலில் இருந்து முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விலகி வருகின்றனர். டி20 உலக கோப்பை தொடர் தொடங்கி காயம், மனநலன், தனிப்பட்ட காரணங்கள் வரை அந்த காரணம் நீள்கிறது.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிய ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ்க்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளார் டிம் சௌதி சோ்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணி சார்பில் 305 சர்வதேச ஆட்டங்களில் ஆடி 603 விக்கெட்டுகளை சாய்த்தவர் டிம் செளதி. அதேபோல் பஞ்சாப் அணியில் ஜை ரிச்சா்ட்ஸனுக்கு பதிலாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளார் அடில் ரஷீத் சோ்க்கப்பட்டுள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸும் சோ்க்கப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments