
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா 'Believe' என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பலருக்கும் பரிசாக கொடுத்தார். இப்போது சிஎஸ்கே அணியின் கேப்டனான தோனிக்கு அந்தப் புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார்.
இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 15ஆம் தேதி வரை எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய சுயசரதை புத்தகத்தை தோனியிடம் கொடுத்துவிட்டு அந்தப் புகைப்படத்துக்கு 'Thala’s touch on my untold story' என பதிவிட்டிருக்கிறார். தோனியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வரவில்லை என்றாலும் 'MS Dhoni: The Untold Story' என்ற திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டது. இதில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கதாநாயகநாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments