ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ஓஷானே தாமஸ் மற்றும் எவின் லீவிஸ் இந்தாண்டு ஐபிஎல்லில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2021 சீசன் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்நிலையில் அமீரக ஷெட்யூலில் இருந்து முன்னணி வெளிநாட்டு வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விலகி வருகின்றனர்.
இதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விதிவிலக்கல்ல. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் மனைவி லூசி இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருப்பதால் பட்லர் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோல நட்சத்திர வீரரான பென் ஸ்டோக்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வுப்பெறுவதாக அறிவித்திருப்பதால். இவ்விரு வீரர்களும் ஐபிஎல்லில் பங்கேற்கவில்லை.
இதனால் இவ்விரு வீரர்களுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஓஷானே தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான எவின் லீவிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments