டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் விளையாட்டில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலம் வென்றுள்ளார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் மாரியப்பன் தங்கவேலு. சேலம் மாவட்டம் வடக்கப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்.
பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு இந்த பதக்கத்தை வென்றுள்ளார் மாரியப்பன். முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய கொடியை தாங்கி செல்லும் பெருமையை பெற்றிருந்தார் அவர். இருப்பினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அது நடக்காமல் போனது.
அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் மாரியப்பன் மற்றும் சரத்குமாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram
டி63 பிரிவில் இந்த பதக்கத்தை அவர் வென்றுள்ளார். அமெரிக்க வீரர் சாம் க்ரிவ் (Sam Grewe) இந்த பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments