சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உயிர்ப்போடு அந்த அணியால் வைக்க முடியும்.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சீசனின் முதல் பாதியில் இரு அணிகளும் டெல்லி மைதானத்தில் விளையாடி இருந்தனர். அதில் ராஜஸ்தான் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியை தழுவி இருந்தன.
ஆடும் லெவன்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், பிரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ்: எவின் லூயிஸ், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் , லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லோமோர், ரியான் பராக், ராகுல் தேவாடியா, கிறிஸ் மோரிஸ், சேத்தன் சகாரியா, ஜெய்தேவ் உனட்கட், முஸ்தாபிசூர் ரஹ்மான்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments