ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
டெல்லி அணிக்காக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். பவர் பிளே ஓவர்கள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்தது. சுனில் நரைன் வீசிய 7வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் க்ளீன் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். டெல்லி அணியில் நிலைத்து நின்று விளையாடி சராசரியாக 30-40 ரன்களை எடுக்கக் கூடியவர்கள் ஸ்ரேயாஸ், தவான். அவர்கள் ஆட்டமிழந்தது டெல்லி அணிக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
தவான் 24 ரன்களில் அவுட்டானார். 9 ஓவர் முடிவில் ஸ்மித் 22 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 4 ரன்னோடும் களத்தில் உள்ளனர்.
ஆடும் லெவன் விவரம்...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சவுதி, லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர்
டெல்லி கேபிடல்ஸ்!
ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், லலித் யாதவ், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments