Advertisement

பத்து ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 82 ரன்கள்: ரன் வேட்டையாடும் கோலி

நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி, பெங்களூரை முதலில் பேட் செய்ய சொல்லி பணித்தது. 

image

அதன்படி அந்த அணிக்காக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். பும்ரா வீசிய ஆட்டத்தின் பத்தாவது பந்தில் படிக்கல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பரத் உடன் கேப்டன் கோலி இணைந்து விளையாடினார். இருவரும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பரத் 24 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து ராகுல் சஹார் பந்து வீச்சில் வெளியேறினார். பத்து ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்துள்ளது. கோலி 29 பந்துகளில் 42 ரன்களை எடுத்துள்ளார். மேக்ஸ்வெல் களத்திற்கு வந்துள்ளார்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments