சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) சார்ஜாவில் அரங்கேறும் 44-வது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட நெருங்கி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதல் அணியாக ‘பிளே-ஆஃப்’ சுற்றை உறுதி செய்யும்.
2 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ள ஐதராபாத் அணி, பிளே-ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. எனவே இன்றைய போட்டியில் இளம் வீரர்கள், புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எஞ்சிய ஆட்டங்களில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க அந்த அணி போராடும் எனத் தெரிகிறது.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments