கோல் அடித்த உற்சாகத்தில் டீசர்ட்டை கழற்றி பார்வையாளர்கள் மத்தியில் வீசிய கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு மஞ்சள் கார்டு கொடுத்து நடுவர் எச்சரித்தார்.
இங்கிலாந்தில் யூஇஎஃப்ஏ (uefa champions league) சாம்பியன் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றையப் போட்டியில் ரொனால்டோவின் மேன் யூனைடட் (Man United) அணியும் வில்லேரியல் (villarreal) அணியும் மோதின. இதில் ரொனால்டோவின் அட்டகாசமான கோல் காரணமாக மேன் யூனைடட் அணி 2-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் போது இரண்டு அணிகளும் 1-1 என்ற நிலையில் இருந்தபோது, 95வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார் ரொனால்டோ. அணியின் வெற்றியை உறுதி செய்த மகிழ்ச்சியில், கோல் அடித்த உற்சாகத்திலும் உடனே தனது டீசர்ட்டை கழற்றி பார்வையாளர்கள் மத்தியில் வீசி ஏறிந்தார். இதனால் அவருக்கு நடுவர் மஞ்சள் கார்டு கொடுத்து எச்சரிக்கை செய்தார். இதனிடையே இந்த போட்டியின் மூலம் சாம்பியன் லீக் போட்டி வரலாற்றில் அதிக முறை (178) முறை கலந்துகொண்டு விளையாடிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments