
2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதே நாளில் 14 ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றியது. அந்தச் சாதனை நினைவுகளை ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
When your FAITH become stronger than your FEAR … then your dream can become a reality #champions #T20WorldCup2007 #TeamIndia pic.twitter.com/fuOWN2VLba
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 24, 2021
2007 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். எனவே 2007 உலகக் கோப்பை நினைவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர் ஒரு புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார். அந்தப் புகைப்படத்தில் உலகக் கோப்பையை ஏந்திய இந்திய வீரர்களின் குழு புகைப்படமும் இருந்தது. அந்தப் புகைப்படத்தின் ஓரம் மட்டும் கிராப் செய்யப்பட்டு ஸ்மைலி வைக்கப்பட்டிருந்தது.
Now u can lick what u see in the picture I cropped https://t.co/K5m8mHU2go pic.twitter.com/LRrLf2LsME
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 24, 2021
இதனை பார்த்த நெட்டிசன் ஒருவகர் "தோனியின் புகைப்படத்தை அழகாக கிராப் செய்து மறைத்துவிட்டீர்கள்" என கலாய்த்து இருந்தார். இதற்கு கோபமுடன் கிராப் இல்லாமல் ஹர்பஜன் சிங் அசல் புகைப்படத்தை பகிர்ந்தார். அதில் கிராப் செய்யப்பட்ட இடத்தில் தோனி இல்லை. புகைப்படக் கலைஞர் பின்பக்கமாக குனிந்தபடி இருக்கிறார். நெட்டிசன் ஒருவருக்கு கடுமையான வார்த்தையை கூறி இந்தப் புகைப்படத்தை பகிர்ந்தார் ஹர்பஜன் சிங்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments