கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி, பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார். அதோடு அந்த அணி 2 - 0 என மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி இருந்தது.
முன்னதாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார் மெஸ்ஸி. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு PSG அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார் மெஸ்ஸி. அந்த அணிக்காக 30-ம் எண் கொண்ட ஜெர்ஸியில் விளையாடி வருகிறார் அவர்.
நான்கு ஆட்டங்கள் விளையாடி மெஸ்ஸி தனது முதல் கோலை PSG அணிக்காக பதிவு செய்துள்ளார். 2018-க்கு பிறகு முதல் முறையாக லீக் சுற்றின் குழுப்பிரிவு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி தோல்வியை தழுவியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments