
ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சி மேற்கொண்டிருந்தபோது புழுதிப்புயல் தாக்கியதன் காட்சிகளை அந்த அணி நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.
சென்னை, பெங்களூரு அணிகள் இடையிலான போட்டி புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் 15 நிமிடங்கள் தாமதாமாக போட்டி தொடங்கியது. இந்நிலையில் ஷார்ஜாவில் முகாமிட்டுள்ள ராஜஸ்தான் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புழுதிப்புயல் அவ்வழியே கடந்து செல்லவே வீரர்கள் அனைவரும் அவசர அவசரமாக மைதானத்தின் உடை மாற்றும் அறைக்கு திரும்பினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments