Advertisement

CSK vs SRH : சாம் கரன் வெளியே.. பிராவோ உள்ளே .. டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 2 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட நெருங்கி விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் முதல் அணியாக ‘பிளே-ஆஃப்’ சுற்றை உறுதி செய்யும்.

2 வெற்றி, 8 தோல்வியுடன் கடைசி இடத்தில் உள்ள ஐதராபாத் அணி, பிளே-ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. எஞ்சிய ஆட்டங்களில் வெற்றிப்பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க அந்த அணி போராடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். சென்னையில் சாம் கர்ரனுக்கு பதிலாக பிராவோ இடம்பெற்றுள்ளார். ஹைதராபாத் அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. அதாவது இந்தப் போட்டியிலும் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை.

சென்னை அணி:

டு பிளசிஸ்
ருதுராஜ் கெய்க்வாட்
மொயின் அலி
அம்பத்தி ராயுடு
சுரேஷ் ரெய்னா
எம்.எஸ்.தோனி
ரவீந்திர ஜடேஜா
டுவைன் பிராவோ
ஷர்துல் தாக்கூர்
தீபக் சாஹர்
ஜோஸ் ஹஸல்வுட்

ஹைதராபாத் அணி:

கனே வில்லியம்சன்
ஜேஸன் ராய்
விரித்திமன் சாஹா
பிரியம் கார்க்
அபிஷேக் சர்மா
ஜேஸன் ஹோல்டர்
அப்துல் சமத்
ரஷித் கான்
புவனேஸ்வர்குமார்
சித்தார்த் கவுல்
சந்தீப் ஷர்மா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments