Advertisement

RCB vs MI : டாஸ் வென்ற மும்பை அணி ஃபீல்டிங் தேர்வு: ஆடும் லெவன் விவரம்

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

image

இரு அணிகளும் இதற்கு முன்னதாக 28 முறை நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் மும்பை 17 முறையும், பெங்களூர் 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையை பெங்களூர் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. 

இரு அணிகளும் அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது பாதி ஆட்டங்களில் இதுவரை வெற்றி பெறவில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் பெங்களூர் மற்றும் மும்பை களம் காண்கின்றன. 

ஆடும் லெவன் விவரம்... 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

ரோகித் ஷர்மா (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்

மும்பை இந்தியன்ஸ்!

விராட் கோலி (கேப்டன்), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments